சினிமா செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து!!

நான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்தவர் கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் புகழாரம்

கார்த்திக் சுப்புராஜ், தனுஷ்
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனுஷின் டுவிட்டர் பதிவு
அந்த வகையில் டுவிட்டர் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் தனுஷ், தான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்த ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் என புகழ்ந்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles