இந்தியாசெய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Modi Ji News 19.06.2020
Modi Ji News 19.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles