சினிமா செய்திகள்

பாக்யராஜ் கண்ணன் படத்தில் இணைந்த கார்த்தி சிம்பு !!

கார்த்தி படத்தில் இணைந்த சிம்பு

                                                     கார்த்தி – சிம்பு
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘சுல்தான்’. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் – மெர்வின் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.
இந்நிலையில், சுல்தான் படத்தில் இடம் பெறும் ‘யாரையும் இவ்ளோ அழகா’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார். விவேகா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்த பாடல் இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
முதல் முறையாக கார்த்தி படத்துக்கு சிம்பு பாடியிருப்பது, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுல்தான் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
Show More

Leave a Reply

Related Articles