நமது மாவட்டம்நமது ஆட்சியர்

பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார்.

உளுந்துார்பேட்டையில் இன்று 21ம் தேதி நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார்.

சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலுார் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள மெட்ரிக், அரசு நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் சார்ந்த தற்காலிக தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று 21ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.உளுந்துார்பேட்டை ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கும் விழாவில், பள்ளிக்கல்வி துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்காலிக தொடர் அங்கீகாரம் ஆணைகளை வழங்குகிறார்.

விழாவில், கலெக்டர் கிரண் குராலா, எம்.எல்.ஏ.,க்கள், பள்ளிக்கல்வித் துறை செயலர், இயக்குனர், மெட்ரிக் பள்ளி இயக்குனர், இணை இயக்குனர்கள், சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் மற்றும் ஆணைகளை பெறும் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles