செய்திகள்விளையாட்டு

பணத்திற்கு தான் முக்கியத்துவம் கிரிக்கெட் பின்னால் சென்று விட்டது – வேகப்பந்து வீரர் டேல் ஸ்டெய்ன்

ஐ.பி.எல். போட்டியில் பணத்துக்கு முக்கியம் - தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெய்ன் சொல்கிறார்

                                                ஸ்டெய்ன்

 

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீரர் டேல் ஸ்டெய்ன். கடந்த ஐ.பி.எல். போட்டியில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார்.

கடந்த ஜனவரி மாதம் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்டெய்ன் அறிவித்திருந்தார். உலகில் நடைபெறும் மற்ற லீக் போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் பணத்துக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிரிக் கெட் பின்னால் சென்று விட்டது என்று ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணியிலும் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கிறார்கள். அதில் அதிக அளவில் பிரபல வீரர்கள் உள்ளனர். அவர்கள் போட்டியின் மூலம் ஈட்டும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப் படுகிறது.

ஒரு கட்டத்தில் அந்த போட்டியில் கிரிக்கெட் தன்மை பின் தள்ளப்படுகிறது. மற்ற லீக் போட்டிகளில் விளையாடுவதால் பெயர் கிடைக்கிறது.

பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு நான் இருக்கும் நாட்களில் கடைசியாக எந்த போட்டியில் விளையாடினேன். அது எவ்வாறு இருந்தது என்று பேசுகிறார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டியில் இருந்தால் யார் என்ன விலைக்கு வாங்கப்பட்டனர் என்பது குறித்த பேச்சு அதிகமாக இருக்கிறது.அதிலிருந்து நான் விலகியிருக்க விரும்புகிறேன்.

இவ்வாறு ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

37 வயதான ஸ்டெய்ன் ஐ.பி.எல். போட்டியில் 97 விக்கெட் (95 ஆட்டம்) கைப்பற்றி உள்ளார். அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள கிளாடியேட்டர் அணியில் 20 ஓவர் லீக் போட்டியில் ஆடி வருகிறார்.

Show More

Leave a Reply

Related Articles