கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

பஜார் தெருவில் உள்ள இரு கடைகாரர்களுக்கு கொரோனா ! அனைத்து மளிகை பல்பொருள் அங்காடிகள் மூடல் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ,சின்ன சேலம் ,சங்கராபுரம் அகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மாவட்டத்தில் மொத்தமாக பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள அக்ரஹார தெரு என்னும் பஜார் தெருவில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது .இப்பகுதியில் வசித்து வரும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இரண்டு கடை உரிமையளர்களையும் தனிமை படுத்தியுள்ளனர் .மேலும் அப்பகுதி முழுவதும் தடை செய்ய பட்ட பகுதியாக அறிவிக்கபட்டு தடுப்பு கட்டைகள் அமைக்கபட்டது இதனால் 103 அத்திதாவசிய பொருட்களின் கடைகள் மூடபட்டு பஜார் தெரு வெறிச்சோடி காணபடுகிறது.மேலும் அப்பகுதியில் கடைவைத்து தங்கியுள்ளவர்களுக்கு வீடு வீடாக சென்று வருவாய் துறையினர் கப சுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.

Kallakurichi Corona News 15.06.2020
Kallakurichi Corona News 15.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles