சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சுந்தர்.சி !!

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி

சுந்தர்.சி
தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி பெற்றவர் சுந்தர்.சி. இவர் பல படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது மீண்டும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி செயோன் இயக்குகிறார்.
வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கும் இப்படம் கிரைம் டிராமாவாக உருவாக இருக்கிறது. இதில் சுந்தர்.சி.யுடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
படக்குழுவினர்
மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
Show More

Leave a Reply

Related Articles