இந்தியாசெய்திகள்

நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் – பிரதமர் மோடி

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி  தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
எரிசக்தியில் தன்னம்பிக்கை அடைய இந்தியா இன்று “ஒரு பெரிய நடவடிக்கை” எடுத்துள்ளது.வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களின் தொடக்கமானது “ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றி வெற்றி என்ற நிலையை கொடுக்கும். நிலக்கரிக்கான சந்தை இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறைகளுக்கும் உதவும்.
நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.
சுய சார்பு இந்தியாவாக மாற இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை வர வேண்டும்.இந்தியா கொரோனா நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றி, தன்னம்பிக்கை அடைந்து அதன் இறக்குமதியைக் குறைக்கும்:
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நாம் வளம்  பெற வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும்.
இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவற்றில் சுமார் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என கூறினார்.

Modi News 18.06.2020
Modi News 18.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles