சினிமா செய்திகள்

தொடங்கியது டிக்கெட் டு பினாலே !

கடந்த சீசனில் இந்த டாஸ்கை வென்ற முகென் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்று வெற்றியும் பெற்றார். அந்த வகையில் இந்த சீசனில் இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bigg boss 4 Tamil : டிக்கெட் டு பினாலே டாஸ்க் தொடங்கியது - வெல்லப்போவது பாலாஜியா, ரியோவா?

                                                                             பாலாஜி மற்றும் ரியோ

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் அர்ச்சனா மற்றும் சுஜித்ரா வைல்டு  கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு அதில் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதன்படி இதுவரை ரேகா, வேல்முருகன், சுஜித்ரா, சுரேஷ், சம்யுக்தா, சனம், நிஷா, ரமேஷ், அர்ச்சனா, அனிதா மற்றும் ஆஜித் வெளியேறியுள்ளனர். தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா, ஷிவானி மற்றும் கேபி ஆகிய 7 பேர் உள்ளனர்.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் நிறைவடைய இருப்பதால், தற்போது சூடு பறக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷன் ப்ராசஸ் ஆனது ஓபன் நாமினேஷனாக இன்று நடைபெறுகிறது. இதில் ஆரி, பாலாஜி இந்த வார நாமினேஷனில் இடம் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் முழு விவரமும் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும். இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஆரி மற்றும் கேபி தனியாக அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் ரியோ, ஆரி ஒரு பயத்தை கொடுக்கிறார், அதாவது பயமுறுத்துகிறார்.

நீங்கள் என்னை இப்படி சொல்லி விட்டீர்கள் என்றால் மக்கள் இதற்கு என்ன கேட்பார்கள் தெரியுமா? என்று அவர் கூறுகிறார். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் இடத்தில் நீங்கள் வரவில்லை என்று தான் கூறினேன். ஆனால் அதற்கு நான் நூறு சதவீத உழைத்திருக்கிறேன், உழைப்பை நீங்கள் கண்டுகொள்ளவில்லை, குழந்தை என எல்லாவற்றையும் இழுக்கிறார். ஆரியின் குழந்தை வந்தபோது நான் ஆசையாக விளையாடி கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு மாதிரி வெறுப்பை உருவாக்குகிறார். இவர் பேசிய சில வார்த்தைகளால் எனக்கு அதிகமாக கோபம் தான் வருகிறது என்று ரியோ கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles