குற்றம்

திருக்கோவிலூர் அருகே மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது.

Kathikuthu News 28.06.2020
Kathikuthu News 28.06.2020

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மூங்கில்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் சரவணன்(47) இவர் கடந்த 25ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த விஜயா (38) என்கிற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது அவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 19 வயதில் ஒரு பெண்ணும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக தனது கணவனின் ஒப்புதலோடு வெளிநாடு சென்றுள்ளார் விஜயா. அங்கு 18 மாதங்கள் பணியாற்றிவிட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஊருக்கு திரும்பியுள்ளார். இதனிடையே தன் கணவருக்கு தெரியாமல் வேலைக்காக கேரளா, பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் வேலை செய்துள்ளார். அந்த இடைப்பட்ட நேரங்களில் குடும்பம் நடத்த கணவர் கூப்பிட்டும் விஜயா வரவில்லை எனவும், அவர் பலருடன் கள்ள தொடர்பில் உள்ளார் எனவும் உறுதி செய்துள்ளார். எனவே தனது மனைவி விஜயாவை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தார் சரவணன், இந்நிலையில், விஜயா மணலூர்ப்பேட்டையில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றுவது தெரியவந்ததை அடுத்து இன்று காலை பேக்கரிக்கு சென்று பொருட்கள் வாங்குவது போல பாசாங்கு செய்த சரவணன் எதிர்பாராத நேரத்தில் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், தனது மனைவி விஜயாவின் கழுத்து பகுதி, முகம், கை ஆகிய பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜயா திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட சரவணனை மனலூர்ப்பேட்டை போலீசார் விரைந்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles