திருக்கோவிலூர்நமது ஆட்சியர்நமது மாவட்டம்

திருக்கோவிலூரில் ஆட்சியர் கிரண்குராலா ஆய்வு!!!

கொரோனா தொற்றால் திருக்கோவிலூர் அதிஷ்டலட்சுமி நகர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகளை கொடுக்க வேண்டும். மேலும் யாருக்காவது காய்ச்சல், சளி தொல்லை இருந்தால், அவர்களை முறையாக கண்காணித்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் சாய்வர்த்தினி, தாசில்தார் சிவசங்கரன், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை, அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி அலமேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Collector 22.06.2020
Collector 22.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles