அரசியல்செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி மகுடம் சூட்டிய தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார் !!!!

வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

வேட்புமனு தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர், முதல் முறையாக தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ளார்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி மகுடம் சூட்டிய தொகுதியில், அவரது பேரனான உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் காணும் உதயநிதி ஸ்டாலினும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தி.மு.க. மூத்த தலைவர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பொன்முடி ஆகியோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Show More

Leave a Reply

Related Articles