செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் சாலை வரி கட்டும் பிரச்சனையால் ஆம்னி பஸ் போக்குவரத்து நாளை தொடங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு அரசு போக்குவரத்து தொடங்கி உள்ளன. நாளை (7-ந்தேதி) முதல் தனியார் மற்றும் ஆம்னி பஸ்களை மாவட்டங்களுக்கு இடையே இயக்க அரசு அனுமதித்து உள்ளது.

சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுமார் 3 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று இரவு காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்களை இயக்காத காலத்துக்கும் சாலைவரி கட்டும்படி நிர்பந்திக்கிறார்கள். அது எப்படி முடியும்?

இது தொடர்பாக ஏற்கனவே ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வழக்கு மறுவிசாரணை வருகிற 25-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகுதான் பஸ்களை இயக்குவது பற்றி முடிவு செய்வோம். எனவே நாளை பஸ் போக்குவரத்து தொடங்காது.

நாங்களும் பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். ஆனால் 50 சதவீத பயணிகளோடு பஸ்களை இயக்க அரசு கூறுகிறது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.

அதற்காக பஸ் கட்டணத்தை உயர்த்தினால் பயணிகள் வரமாட்டார்கள். இன்ஸ்யூரன்ஸ் கட்டுவது, பைனான்ஸ் கட்டுவது ஆகியவற்றிலும் கால நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டுள்ளோம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்த பிறகுதான் பஸ்களை இயக்குவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் தனியார் பஸ் போக்குவரத்தும் நாளை தொடங்கவில்லை. தொடங்குவதா? வேண்டாமா? என்பது பற்றி இன்று மாலை முடிவு செய்கிறார்கள். பிற்பகலில் சங்க நிர்வாகிகள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் பஸ்களை இயக்குவது பற்றி முடிவு செய்து மாலையில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles