செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் இன்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு.. 985 பேர் டிஸ்சார்ஜ்! #Corona

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,21,550 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 60,174 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,41,37,925 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,456 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 83 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேருக்கும், திருவள்ளூரில் 41 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 24 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 985 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 01 ஆயிரத்து 414 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 7,970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,166 ஆக அதிகரித்துள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles