அரசியல்செய்திகள்

தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேர்தல் பிரச்சாரத்தில் -முதல்வர் பழனிசாமி!!

“அனைத்து சமுதாயத்தினரையும் மனிதநேயத்தோடு பார்க்கும் கட்சி அதிமுக” – முதல்வர்

AIADMK-is-a-party-that-treats-all-communities-with-humanity-says-chief-minister-edappadi-palanisamy

அனைத்து சமுதாயத்தினரையும் மனிதநேயத்தோடு பார்க்கும் கட்சி அதிமுக என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இதில் முதல்கட்டமாக, பார்த்திபனூரில், கால்நடை வளர்ப்போர், நெசவாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை முதல்வர் கேட்டறிந்தார். அதனைதொடர்ந்து, பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், 7 உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கும் அரசாணை 30 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனக் கூறினார்.

image

 

காவிரி-குண்டாறு திட்டம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஆந்திரா-தெலுங்கானா முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 75ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். ராமநாதபுரத்தில் இஸ்லாமிய தலைவர்களுடன் முதல்வர் கலந்துரையாடிய முதல்வர், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் கட்சி அதிமுக என தெரிவித்தார்.

Show More

Leave a Reply

Related Articles