கல்வராயன்மலைநமது மாவட்டம்

தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் 80 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள கச்சிராயபாளையம் அருகே உள்ள கல்வராயன் மலை அடிவார பகுதியில் உள்ள பரிகம் கிராமம் .இப்பகுதியானது கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளதால் தண்ணீர் தேடி வன பகுதியில் இருந்து ஊருக்கு வந்த புள்ளி மான் அங்குள்ள விவசாய கிணற்றில் விழுந்தது.சுமார் 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளி மான் குறித்து தீயணைப்பு திறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் நீந்தி கொண்டிருந்த புள்ளி மானை உயிருடன் மீட்டனர்.பிறகு அதனை வனபகுதியில் வனதுறையினர் உதவியோடு விட்டனர்.வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதால் இது போல நடப்பதாகவும் அதனை தடுக்க வன துறையினர் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிறப்ப வேண்டும் என பொதுமக்கள் கொரிக்கை விடுத்துள்ளனர்

Deer News
Deer News
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles