உளுந்தூர்பேட்டைநமது மாவட்டம்

தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகள் விற்ப்பனை செய்தவர் கைது ! தொடர்கிறதா லாட்டரி சீட்டு விற்ப்பனை !!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி கிராமம் பேருந்து நிறுத்தத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்களின் அதிரடி உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட 3ம் நெம்பர் லாட்டரி சீட்டுகளை விற்ப்பனை செய்த போது சம்பவ இடத்திலேயே கையும் கலவுமாக பிடித்து கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 50000-ம் ரொக்கத்தையும் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் லாட்டரி விற்பனை செய்த நபர் உளுந்தூர்பேட்டை தாலுகா காட்டுநெமிலி கிராமத்தைச் சேர்ந்த முத்தரசன் மகன் வாசு என்பதும் தெரிதவந்தது .மேலும் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் லாட்டரி சீட்டால் வாலிபர் ஒருவர் குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை யே உலுக்கிய நிலையில் மேலும் லாட்டரி சீட்டுகளின் விற்ப்பனை இன்னும் தொடர்ந்து வருவதால் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு …

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles