செய்திகள்தொழில்நுட்பம்

ஜியோஒஎஸ் கொண்ட லேப்டாப் மாடல்களை உருவாக்க ரிலையன்ஸ் திட்டம் !! ஜியோ

மலிவு விலை லேப்டாப் உருவாக்கும் ரிலையன்ஸ் ஜியோ?

                                                ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய லேப்டாப் ஜியோபுக் எனும் பெயரில் அறிமுகமாகலாம். ஜியோவின் முதல் லேப்டாப் மாடல் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஜியோவின் முதல் லேப்டாப் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஜியோவின் சொந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஒஎஸ் ஜியோஒஎஸ் என அழைக்கப்படலாம். இதுகுறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புிய லேப்டாப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 4ஜி எல்டிஇ வசதி கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் ஜியோ லேப்டாப் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இதோடு ஜியோ லேப்டாப் என கூறி ப்ரோடோடைப் மாடல் ஒன்றின் படமும் இணையத்தில் வெளியானது.
 ஜியோ
புதிய லேப்டாப் உருவாக்க ஜியோ நிறுவனம் சீனாவை சேர்ந்த புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு மொபைல் சாதனங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கி தருகிறது.
ஜியோ மற்றும் புளூபேங்க் இணைந்து மற்ற உற்பத்தியாளர்களிடம் இருந்து பாகங்களை வாங்க இருக்கின்றன. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் DRAM மற்றும் NAND சிப், குவால்காம் நிறுவனத்தின் சிப்செட் உள்ளிட்டவைகளை வாங்கி பயன்படுத்த இருக்கிறது.
தற்போதைய தகவல்களின்படி ஜியோபுக் மாடலில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் இதில் 1366×768 பிக்சல் ரெசல்யூஷன், ஜியோ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன செயலிகள் பிரீ-லோட் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
Show More

Leave a Reply

Related Articles