சங்கராபுரம்நமது மாவட்டம்

சொட்டு நீர் பாசன திட்டத்தில் சேர அழைப்பு!!!

வேளாண்மைத் துறையின் சொட்டுநீர் பாசன திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெற சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து உதவி இயக்குனர் சந்துருவின் செய்திக்குறிப்பு:சங்கராபுரம் பகுதியில் ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள நீர் ஆதாரத்தைக் கொண்டு சாகுபடி செய்ய சொட்டு நீர் பாசனம் ஏற்றதாகும்.வேளாண் துறை மூலம், சொட்டு நீர் பாசன திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.சொட்டு நீர் பாசன திட்டத்தின் முலம் அதிக மகசூல் பெறமுடியும். சங்கராபுரம் வட்டத்திற்கு சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக அரசு 16.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒரு விவசாயி குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.மேலும் தெளிப்பு நீர் பாசன கருவிகளான மழை துாவான், ஸ்பிரிங்லர் கருவிகள் வழங்கப்படுகிறது. இக் கருவிகளை உளுந்து, வேர்க்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.பிரதம மந்திரி விவசாய நீர்பாசன திட்டத்தின் கீழ் திறந்த வெளி கிணறு மற்றும் குழாய் அமைக்க 25 ஆயிரம் ரூபாய், மின் மோட்டார் பம்ப் செட் அமைக்க 15 ஆயிரம், பாசன பி.வி.சி., குழாய் அமைக்க 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

துணை நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சங்கராபுரம் வட்டாரத்தில் சங்கராபுரம், வடபொன்பரப்பி, ஆலத்துார் குறுவட்டங்கள் பாதுகாப்பு நீர் மண்டலத்தில் வருவதால் இப்பகுதியில் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன திட்டத்தில் சேர விவசாயிகள் தங்கள் புகைப்படம், ஆதார், சிட்டா, அடங்கல், நில வரைபடம், கிணறு ஆவணம், சிறு குறு விவசாயிக்கான சான்று, பாங்க் பாஸ் புக் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Sottu Neer Pasanam News
Sottu Neer Pasanam News
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles