உலகம்செய்திகள்

சீனாவில் பரவும் புதிய வகையான பன்றிக் காய்ச்சல் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டில் பரவிய H1N1 காய்ச்சலின் மரபணுவைக் கொண்ட இந்த புதிய பன்றிக் காய்ச்சலுக்கு G4 என்று பெயரிடப்பட்டுள்ளது. 2011 -ம் ஆண்டு முதல் 2018 -ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 30,000 சோதனைகளின் மூலம் ஜி4 மனிதர்களுக்குத் தொற்றக் கூடும் என்று சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பன்றிப் பண்ணைகள் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்வோரில் 10.4 சதவீதம் பேருக்கு ஏற்கனவே இதன் பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஜி4 பரவும் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகையில் 4.4 சதவீதம் பேருக்கு ஜி4 பரவி இருக்கலாம் என்று கணித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் பன்றிப் பண்ணைகள் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்வோரை கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

New Pandemic Potential Discovered In China
New Pandemic Potential Discovered In China
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles