நமது மாவட்டம்சின்னசேலம்

சின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடி

சின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சின்னசேலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு பயிருக்கு அடுத்ததாக மானாவாரி மற்றும் இறவையில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். குளிர்கால இறவைப் பயிராக ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திலும், கோடைகால பயிராக பிப்ரவரி – மார்ச் மாதத்திலும், மானாவாரி பயிராக செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும் பயிரிடப்படுகின்றன.விதையை முக்கிய நோக்கமாகக் கொண்டு இறவையில் பயிரிடப்படும் வீரிய ரக ஒட்டு பருத்தி சின்னசேலம் பகுதியில் ஆண்டுதோறும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடிக்கு, பல தனியார் நிறுவனங்கள் விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த வகை பருத்தியில் பஞ்சு விளைந்ததும் அதிலிருந்து விதை, பஞ்சுகளை தனித் தனியாக பிரித்து தனியார் விதை நிறுவனங்களே நேரடியாக கொள்முதல் செய்கின்றன.இதனால், விதைக்கு நல்ல விலை கிடைப்பதால் வீரியரக ஒட்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி பயிரிடுகின்றனர். ஒட்டுரக பருத்தியில் ஆண், பெண் செடிகள் என தனித்தனியாக பயிரிடப்படுகிறது.ஒரு ஏக்கர் அளவு பெண் செடிக்கு, 15 சென்ட் அளவு ஆண் செடிகள் வளர்க்கப்படுகிறது.

[bctt tweet=”சின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.” username=”KallakurichiN”]

சின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடி
சின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடி

தினமும் ஆண் செடியில் இருந்து பூவை பறித்து மகரந்தத்தை பெண் செடி பூவில் தேய்க்க வேண்டும். அப்போது தான் அதிக காய் உருவாகி மகசூல் அதிகரிக்கும். வீரிய ரக ஒட்டு பருத்தி இறவையில் சாகுபடி செய்யும் நிலையில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிடப்படுகிறது.மேலும், சில நாட்களாக பெய்து வரும் மழையால் வீரிய ரக ஒட்டு பருத்தி செடிகள் நன்றாக செழித்து வளர்ந்துள்ளன.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles