சினிமா செய்திகள்

சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி!!

2 கதைகளை தேர்ந்தெடுத்த ரஜினி

ரஜினிகாந்த்
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது. அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை இரண்டுக்கு மெட்டும் வெளியில் வந்தார்.
இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ரஜினி கூறிவிட்டதாகவும் வரும் 8ந்தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் இறுதிவரை படப்பிடிப்புக்கு தேதிகள் கொடுத்துள்ள ரஜினி தேர்தலுக்கு முதல் நாள் தான் சென்னைக்கு திரும்பி வாக்களிப்பார் என்கிறார்கள்.
ரஜினிகாந்த்
ரஜினி தொடர்ந்து நடிக்கும் விருப்பத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து கதைகளை கேட்டு வந்தவர் 2 கதைகளுக்கு சம்மதம் சொல்லி இருக்கிறார் என்றும் இளம் இயக்குனர்களுடன் இணையும் அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Show More

Leave a Reply

Related Articles