நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

சாலை விபத்தில் சிக்கிய காவலரின் குடும்பத்திற்க்கு 25 லட்சம் நிதி !

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் பகுதியில் உள்ள பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் தலைமை காவலர் கோபி .இவர் கடந்த மாதம் தியாக துருகம் புறவழிச்சாலையில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அடையாளம்  தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இந்த நிலையில் அவர்களிண் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கோபியுடன் படித்த 2003 ஆண்டு காவலர்கள் 5043 காவலர்கள்  தலா 500 ரூபாய் வீதம் சேர்த்து சுமார் 25 லட்சம் ரூபாய் தொகையை கோபியின் குடும்பத்தில் உள்ள மகன் பெயரில் 10 லட்சத்தையும்  ,மகள் பெயரில் 10 லட்சமும் எல் .ஐ சி யில் செலுத்தபட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் தலா  20 லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தும்  ,மனைவிக்கு 2.50 லட்சமும் மற்றும் தாய் -தந்தையினருக்கு 2.50 லட்சம் ரூபயும் என அவர்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இத்தொகை வழங்கபட்டது.இதனை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 2003 ம் ஆண்டு படித்த உதவும் கரங்கள் என்ற காவலர்களின் முயற்சியால் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கபட்டது அனைவரின் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றுள்ளது..

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles