குற்றம்

சாராயம் காய்ச்ச எடுத்து சென்ற 600 கிலோ வெள்ளம் பறிமுதல் ! 350 லிட்டார் சாராயம் பறிமுதல் !

Sarayamnews
Sarayamnews

144 தடை உத்தரவினால் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடபட்டுள்ளது இதனால் கள்ளசாராயத்தின் விற்ப்பனை அமோகமாக உள்ளது .குறிப்பாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதிகளில் கள்ளசாராயம் காய்ச்சுவது வாடிக்கையாக உள்ளது.இந்த நிலையில் இதுவரையில் 40 ஆயிரம் லிட்டருக்கு மேல் சாராய ஊரல்களை அழித்து போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமல் பிரிவு போலிசார் நள்ளிரவு வெள்ளிமலை முதல் சின்ன திருப்பதி செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்ட போது விளாம்பட்டி என்ற இடத்தில் 20 கிலோ எடை கொண்ட 40 வெள்ளம் மூட்டைகளை ஏற்றி வந்த மினி டெம்போவை சோதனையிட்டனர்.அப்போது கள்ளதனாமாக சாராயம் காய்ச்ச வெள்ள மூட்டைகள் (600 KG) எடுத்து சென்றது தெரியவந்தது .மேலும் மினி டெம்போவில் 120 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர் .அதே போல மினி   டெம்போ வை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் 230 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்த மூவரை மடக்கி பிடித்து கைது செய்தனர் .மொத்தமாக 6 பேரையும் கைது செய்து மூன்று இருசக்கர வாகனம் மற்றும் மினி டெம்போ ஆகியவை பறிமுதல் செய்தனர்..

Sarayamnews
Sarayamnews
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles