கள்ளக்குறிச்சிநமது ஆட்சியர்

சமூக பரவலாகத் பரவும் கொரானா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் முழு கடை அடைப்பு செய்யப்பட்டுள்ளது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சின்னசேலம் வடக்கநந்தல் உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் இதுவரையில் கோரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்திருக்கிறது இதன்காரணமாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள செக்குமேட்டு தெரு, குளத்து மேட்டு தெரு எம் ஆர் என் நகர், வாய்க்கால் மேட்டு தெரு, ராஜா நகர் காந்தி சாலை உட்பட பல்வேறு பகுதிகள் மூடப்பட்டுள்ளது மேலும் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றக்கூடிய சுமார் 26 நபர்களுக்கு இந்த கொரோனா தொற்றானது முதலில் உறுதி செய்யப்பட்டு அதன் தாக்கம் சமூக பரவலாக மாறி வருகிறது இதன் காரணமாக கள்ளக்குறிச்சி காமராஜ் காய்கறி மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் இன்று முழுஅடைப்பு செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது அதனடிப்படையில் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் அனைத்து தெருக்கள் உட்பட சுமார் 2300க்கும் மேற்பட்ட கடைகள் இன்று மூடப்பட்டிருக்கிறது. அதேபோல முக்கிய சாலைக்கு இருக்கக்கூடிய சேலம் சாலை, சென்னை சாலை ,காந்தி சாலையில் இருக்கக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டு இருக்கிறது காலை முதல் இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வந்தாலும் மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் முடி திருத்தும் கடைகள் உட்பட பல கடைகள் அடைப்பு செய்யப்பட்டிருக்கிறது ஏற்கனவே கள்ளக்குறிச்சி இருக்கக்கூடிய அக்கிரகாரத்தில் காய்கறி மார்க்கெட் மற்றும் வந்து பஜார் தெரு உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருக்கிறது. தற்போது இன்று முழு கடை அடைப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து கடைகளும் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கோனா வைரசை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் சார்பில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா தெரிவித்திருக்கிறார்

Market News 28.06.2020
Market News 28.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles