ஆன்மீகம்

சந்திர பலம் பெற வேண்டுமா ? அப்பனா அதுக்கு இன்று தான் சரியான நாள் !

உலகின் முதன் கடவுள் என்றழைக்கபடும் பிள்ளையார்’ என்று சொல்வதற்கேற்ப வாழ்க்கையை வலிமைபெறவும் ,வடிவம்பெறவும், வணங்கவும் எளிமையாக இருப்பவர் விநாயகர் . ஆனைமுகன் என்றாலும், பெரும்  கீர்த்தியைக் கொண்ட முழுமுதற்கடவுள் இவர். இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். ‘சங்கஷ்டம்’ என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நியதி.

அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். அது போல இன்று சங்கட ஹர சதூர்த்தி மட்டுமல்ல மகா சங்கடஹர சதூர்த்தியாகும் எனவே இன்று அனைவரும் பிள்ளையாரின் திருவடிகளை தொட்டு வணங்கி முதற்கடவுளின் அருளை பெருங்கள் ..கொரோனா அச்சத்தினால் பல பெரிய கோயில்கள் அடைக்கபட்டலும் சிறிய அளவிலான கோயில்கள் திறந்து தான காணபடுகிறது .எனவே உன் வாழக்கையில் இருக்கும் பிரச்சனைகளை தவிடு பொடியாக்கும் பிள்ளையாரை தேடி பொடியெடுத்து வையுங்கள் ……

ஆசிரியர்

சங்கரடஹர சதூர்த்தி
சங்கரடஹர சதூர்த்தி

 

கள்ளக்குறிச்சி.நியூஸ் 

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles