சங்கராபுரம்நமது மாவட்டம்

சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கொசப்பாடி ஏரி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 36), அய்யனார் (29), வீரபாண்டியன் (34), ராஜேந்திரன் (27), மூர்த்தி (25), பிரபாகரன் (28), கோவிந்தராஜ்(28) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.570 ரொக்கம் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் பாண்டலம் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடியதாக குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (32), இளையராஜா(33), முருகன் (42), தேவபாண்டலத்தை சேர்ந்த மணி (40), பாண்டியன் (34), சங்கராபுரத்தை சேர்ந்த ராஜா (38), செந்தில் (38) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Arrest News 24.06.2020
Arrest News 24.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles