இந்தியாசெய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரே நாளில் 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது !

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,922 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – இது இதுவரை இல்லாத அளவுக்கு நாடு தழுவிய ஒருநாள் பாதிப்பாகும்.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,73,105 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு சிக்கிச்சை பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை 1,86,514 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் நாடு 418 இறப்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்த  இறப்பு எண்ணிக்கை 14,894 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்புகளின் அடிப்படையில் ஏற்கனவே இரண்டாவது மோசமான மாநிலமாக விளங்கும் டெல்லி தற்போது  மும்பையை முந்தியது,அங்கு பாதிப்பு  3,788 அதிகரித்து 70,390 ஐ எட்டியது. மும்பையில் இதுவரை 69,625 வழக்குகள் பதிவாகியுள்ளன.
நாட்டில் பதிவாகியுள்ள 4.7 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளில் 15.34 சதவீதம் பேருக்கு மட்டுமே அவசர சிகிச்சை பிரிவு தேவை 4.16 சதவீத நோயாளிகள் மட்டுமே வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளனர்  என்று சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
atpositive
atpositive

கொரோனா வைரஸ் தொற்று வழக்குகளின் இரட்டிப்பு நேரம் ஜூன் 12 அன்று 17.4 நாட்களிலிருந்து கடந்த மூன்று நாட்களில் 19.7 நாட்களாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு மாதிரிகள் தினசரி பரிசோதனை நேற்று முதல் முறையாக இரண்டு லட்சத்தை தாண்டியது. குணமடைவோர் விகிதம் 56.71 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles