நமது மாவட்டம்ரிஷிவிந்தியம்

கொரோனா ஊரடங்கால் கரித்துண்டு விற்பனை முற்றிலும் முடங்கியது

கொரோனா ஊரடங்கினால் கரித்துண்டு விற்பனை முற்றிலும் முடங்கி வருமானமின்றி தவிப்பதாக உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரித்துண்டு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கினால் வியாபாரம் முடங்கி வருமானமின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து கரித்துண்டு விற்பனை செய்யும் கண்ணாயிரம் என்பவர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கரித்துண்டு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அருகில் உள்ள ஏரி, விளைநிலங்களில் வளர்ந்துள்ள முள்வேலி மரங்களை மொத்தமாக பேசி வாங்குவோம். பின்னர் மரங்களை துண்டாக்கி காயவைத்து குவித்து, காற்று புகாமல் இருக்க அதன் மேற்பரப்பை மணலால் மூடி, தீ வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி கண்காணிப்போம்.

எட்டு முதல் பத்து நாட்களுக்குப் பிறகு தீயை அணைத்து கரித்துண்டுகள் சேகரித்து விற்பனை செய்வோம். பெரிய அளவிலான இறைச்சி கடைகள், சில்வர், அலுமினிய பாத்திர உற்பத்தியாளர்கள், டீ கடை வைத்திருப்பவர்கள் எங்களிடம் கரித்துண்டுகளை வாங்கி செல்வர்.பெரும்பாலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், பெங்களூருக்கும் கரித்துண்டு மூட்டைகளை ஏற்றுமதி செய்வோம். 4 மாதத்திற்கு ஒரு முறை 120 கரித்துண்டு மூட்டைகளை ஏற்றுமதி செய்வது வழக்கம். 1 மூட்டையின் விலை 600 ரூபாய்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொழிற்சாலைகள், டீ கடை மற்றும் ேஹாட்டல்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. மேலும் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு லோடு வண்டிகளும் செல்வதில்லை. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் கரித்துண்டு விற்பனையாகாததால், 16 லோடு கரித்துண்டு மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Karuppu Kari News 06.08.2020
Karuppu Kari News 06.08.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles