நமது மாவட்டம்தியாகதுருகம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவர் மலைகோட்டாலம் அரசு மருத்துவ மையத்தில் மருந்தாளுனராக வேலைபார்த்து வந்தார்.

 

இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். அப்போது சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவரது தந்தை யாகராஜன் (90) உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவியது.

எனவே 5 பேரும் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் நேற்று காலை இறந்தார். இவரை தொடர்ந்து சுப்பிரமணியனும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவர்களின் உடல்கள் மேல்மருவத்தூரில் தகனம் செய்யப்பட்டது. இவரது குடும்பத்தை சேர்ந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles