நமது மாவட்டம்திருக்கோவிலூர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் குமரகுரு எம்.எல்.ஏ

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் குமரகுரு எம்.எல்.ஏ
திருக்கோவிலூர் மற்றும் முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 18 பேரின் குடும்பங்ளுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் திருக்கோவிலூர் நகர அ.தி.மு.க. செயலாரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான கே.சுப்பு என்கிற சுப்பிரமணியன் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் ஏ.பி.பழனி, என்.சேகர், எஸ்.கே.டி.சி.சந்தோஷ், எஸ்.பழனிச்சாமி, மாரங்கியூர் எம்.இளங்கோவன், எம்.தனபால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து வரும் 18 பேரின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை, காய்கறி, அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
இதில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் என்.துரைராஜ், துறிஞ்சிப்பட்டு வி.முருகன், நரியந்தல் பி.இளங்கோவன், பொன்னியந்தல் மெய்யூர் செந்தாமரை தண்டபாணி, சாங்கியம் கே.எம்.பரசுராமன், மனோகர், அக்ரோ ராஜா, நகர அவைத்தலைவர் ஜெயபால், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சம்பத், மாவட்ட பேரவை இணை செயலாளர் சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரன், வக்கீல்கள் கே.உமாசங்கர், செல்வக்குமார், துரை, அசோக்மேத்தா, மாவட்ட பேரவை இணை செயலாளர் எஸ்.கே.டி.சி.அசோகன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர்கள் சக்திவேல், பாலாஜி, கூட்டுறவு வங்கி இயக்குனர் சத்தியமூர்த்தி, நகர பொருளாளர் ஆதம்ஷபி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் லலிதா வெங்கடேசன், அசோக்குமார், ஏ.கே.வி. என்ற வெற்றிச்செல்வன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஏ.கண்ணன், நகர நிர்வாகிகள் பேரவை செயலாளர் மணி, வார்டு செயலாளர்கள் திருமலை, சின்னதம்பி, ரவி, சாங்கியம் ஞானமூர்த்தி, பழங்கூர் குரு, அருள், ராஜா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles