செய்திகள்உலகம்

குவாட் கூட்டணி உச்சி மாநாடு நாளை காணொலி காட்சி மூலம் நடக்கிறது….

ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை

மோடி, ஜோ பைடன்

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2007-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலேயே இதுவரை பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்தநிலையில், முதல்முறையாக தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது.

இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜென் பிசாகி கூறியதாவது:-

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளிகள் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் கூட்டாளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புக்கு ஜோ பைடன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

இந்த கூட்டத்தில், பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உலக சமுதாயம் சந்திக்கும் கொரோனா அச்சுறுத்தல், பொருளாதார பிரச்சினை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles