விவசாயம்

கீரை சாகுபடியில் விவசாயிகள் !!!

சங்கராபுரம் பகுதியில் கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் நீர் நிலைகள் வறண்டன. விவசாய கிணறுகளில் நீர் மட்டம் குறைந்ததால் குறைந்த தண்ணீர் செலவில் நிறைந்த லாபம் கிடைக்கும் கீரை வகைகளை சாகுபடி செய்யும் பணியில் நெடுமானுார், காட்டுக்கொட்டாய், பொய்க்குனம், செட்டியந்துார் கிராம விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சிறு கீரை, முளைக்கீரை, அரை கீரை, பாளை கீரை, வெந்தய கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பருப்பு கீரை, முருங்கை கீரை, கொத்தமல்லி போன்ற கீரை வகைகளை சங்கராபுரம் பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது கீரை வகைகள் நன்கு வளர்ந்துள்ளதால் அறுவடை செய்து, ஒரு கட்டு 5 ருபாய் என சங்கராபுரம் உழவர் சந்தையில் விற்பனை செய்கின்றனர். அலைச்சலின்றி தினசரி கைமேல் காசு கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் கீரை வகைகளை பயிர் செய்கின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles