சங்கராபுரம்நமது மாவட்டம்

கிணற்றில் விழுந்த பசுமாடு உட்பட இருவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள சங்கராபுரம் அருகே உள்ளது எடுத்தானூர் கிராமம் .இக்கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது விவசாய நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார் .அப்போது பசு மாடு தவறி கிணற்றினுள் விழுந்தது.இதனை மீட்க அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கிணற்றுக்குள் குதித்து மாடை மீட்க முயன்றனர் இதனால் மேலே ஏற முடியாமல் தவித்த இளைஞர்கள் உட்பட மாடை மீட்க சங்கராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க பட்டதன் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் முதலில் பசுமாடை மீட்டனர் .அதன் பிறகு கிணற்றுனுள் இருந்து இரண்டு நபர்களையும் உயிருடன் மீட்டனர்.சரியான நேரத்தில் இரவு நேரமென கூட பாராமல் இருட்டில் கிணற்றுக்குள் இறங்கி மூன்று உயிர்களை மீட்ட தீயணை ப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Cow News 26.06.2020
Cow News 26.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles