நமது ஆட்சியர்திருக்கோவிலூர்நமது மாவட்டம்

கிசான் திட்ட முறைகேடு குறித்து திருக்கோவிலூரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அதிரடி ஆய்வு !

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம் பூண்டி விளந்தை கிளையில் செயல்பட்டுவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் பலர் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு வந்தாலும் இதனால் பணம் எடுப்பதற்கு சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவிற்க்கு புகார் மனு அளித்துள்ளனர்.மேலும்  கிசான் திட்டத்தில் முறைகேடு செய்து முடக்கபட்ட வங்கி கணக்குகளை மீட்க வங்கி அதிகாரிகள் பணம் கேட்பதாக எழுந்த சர்ச்சையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா வங்கிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.மேலும் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்த பணத்தை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து இது போன்று சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்..

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles