நமது ஆட்சியர்

காதி கிராப்ட் சிறப்பு விற்பனை !

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் காந்தி 152வது பிறந்த நாள் விழா மற்றும் ‘காதி கிராப்ட்’ தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் கிரண் குராலா தலைமை தாங்கி காந்தி உருவ படத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து, ‘காதி கிராப்ட்’ கதர் ஆடைகளின் விற்பனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில், கதர் ஆய்வாளர் பொன்ராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி அலுவலர் சதீஷ் மற்றும் கதர் அங்காடி மேலாளர் கலியமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்தாண்டுகாதி கிராப்டில் விற்பனை இலக்காக 82.11 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, 83.60 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.இந்தாண்டு விற்பனை இலக்காக 82.11 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கதர், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles