கள்ளக்குறிச்சிஅரசியல்நமது மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரானா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர்!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரானா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துக்கொண்டு ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு,பிரபு, மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துக்கொண்டு வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை , வேளாண்மை துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தோட்டக்கலை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுக்காப்பு துறை உள்ளிட்ட 8 துறைகளின் கீழ் அம்மா இருச்சக்கர வாகனம், முதியோர் உதவி தொகை, வீட்டுமனைப்பட்டா, தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்கள் என 15 ஆயிரத்து 16 பயணாளிகளுக்கு 33.315 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அடிக்கல் நாட்டினார் எடப்பாடி;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணி துறை , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்படவுள்ள மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், சுற்றுசுவர், அறிவியல் ஆய்வகம்,பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி,ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம்,ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்தேக்க தொட்டிகள் உள்ளிட்டவை என 20.86 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 60 கட்டிட பணிகளுக்கான அடிக்கலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாட்டினார்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆகிய துறைகளின் சார்பில் 15 புள்ளி 16 கோடி மதிப்பீட்டில் 14 முடிவற்ற திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles