கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வரும் நிலையில் .நேற்று வரையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 527 ஆக இருந்தது .நேற்று 477 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.மொத்தமாக 1100 பரிசோதனை முடிவுகள் வர இருந்த நிலையில் அதில் 300 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வெளியானது அந்த பரிசோதனை முடிவில் 22 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகிருப்பது தெரியவந்துள்ளது .இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 346 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர் .இன்று தொற்று உறுதியாகிருப்பவர்களை சேர்த்து மீதமுள்ள 205 நபர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர் .அதில் 150 நபர்களுக்கு அறிகுறியின்றி தொற்று உறுதியாகியுள்ளது .மேலும் மாவட்டத்தில் இது வரையில் ஒருவர் மட்டுமே கொறோனாவால் உயிரிழந்துள்ளார் .இன்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளாது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ,வடக்கனந்தல் ,சின்னசேலம் ,சங்கராபுரம் ,திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சி என பல்வேறு பகுதிகள் கட்டுபாட்டு பாட்டு பகுதிகளாக அறிவிக்கபட்டு மூடபட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் கிருமி நாசிகள் கொண்டு சுத்தம் செய்வது ,தொற்றுள்ளவரின் தொடர்பு அறிவது,கபசுர குடிநீர் வழங்குவது  போன்ற பணிகளில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .இதுவரையில் மாவட்டத்தில் மொத்தமாக 16 ஆயிரத்து 978 பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளது.மேலும் மாவட்டத்தில் இதுவரையில் 23 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதில் கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையத்தில் மட்டும் 18 போலிசாருக்கு தொற்று உறுதியாகியுள்ளது ..மாவட்டத்தில் காவலர்களுக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தியாகதுருகம் ,சின்ன சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ள போலிசாருக்கு பரிசோதனி செய்து வருகிறார்கள் …

Kallakurichi Corona Update 27.06.2020
Kallakurichi Corona Update 27.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles