நமது ஆட்சியர்

கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு ! ஷட்டரை திறந்து வளாகங்களுக்குள் சென்று சோதனை !!

கள்ளக்குறிச்சி பகுதியில் இன்று முதல் அரசின் அறிவுரை படி என்னென்ன கடைகள் இயங்கலாம் ,எது இயங்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவவிப்பை வெளியிட்டது அதனை தொடர்ந்து அரசின் அறிவிப்புகளை பொதுமக்கள் கடை பிடிக்கிறார்களா எனவும் ஒரு சில கடைகள் ஷட்டரை முடிவிட்டு பணி செய்வதாக எழப்பட்ட புகாரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் ஆய்வு மேற்கொண்டார் .அப்போது அனுமதியின்றி திறக்கபட்ட கடைகளை எச்சரித்தும் வெளியில் முக கவசம்மின்றி வருபவர்களை எச்சரித்தும் அனுப்பினார் .அதே போல காம்ப்ளக்ஸ் களில் நுழைவு வாயிலை மூடிவிட்டு பணி செய்து கோண்டிருந்தததை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஷர்ட்டர்களை திறந்து கடையினுள் இருந்தவர்களை அப்புறபடுத்தினார் .அதே போல கடைகள் திறக்கபடும் பட்சத்தில் கடைக்கு சீல் வைக்கபடும் என எச்சரிக்கை விடுத்து சென்றார்..இது போல மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்று 50 க்கும் மேற்பட்ட போலிசார் தேவையின்றி வெளியில் வரும் ஆட்டோக்கள் ,கார்களை பறிமுதல் செய்தனர் ..

Collector Kira Kurala 05.05.2020
Collector Kira Kurala 05.05.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles