நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன் முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன் முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி கட்டப்பட்டு வருகிறது. 382 கோடி ரூபாய் மதிப்பில் 7 தளங்களைக் கொண்டு கட்டப்பட உள்ளது. இதில் அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, புறநோயாளிகள் பிரிவு, விரிவுரையாளர்கள் பிரிவு, ரத்தவங்கி, மருத்துவக் கிடங்கு, பல் மருத்துவமனை பிரிவு, ஆய்வகம், நவீன சமையலறை, மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதிகள், மருத்துவ நிலைய அலுவலர் குடியிருப்பு, உதவி மருத்துவ நிலைய அலுவலர் குடியிருப்பு மற்றும் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.

மேலும், உடற்கூறியல் பிரிவு, விரிவுரையாளர் அறை, உடலியல் பிரிவு, சமூகம் சார்ந்த மருத்துவப்பிரிவு, நோய் கிருமி ஆராய்ச்சி பிரிவு, நுண்ணுயிரியல் பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு, மருந்தியல் பிரிவு, 800 இருக்கைகள் கொண்ட அரங்கக் கூடம் ஆகியவையும் அமைக்கப் பட உள்ளது.கட்டுமானப் பணிகளுக்காக மணல், ஜல்லி உள்ளிட்ட கான்கிரீட் கலவைக்கு மூன்று ராட்சத உருளைகள் அங்கேயே அமைக்கப்பட்டுள்ளன. அடிதளம் அமைப்பதற்காக மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு வருகிறது. மேலும், கான்கிரீட் பில்லர் அமைப்பதற்கு கம்பிகள் கட்டும் பணிகளும் விரைந்து நடந்து வருகிறது.

வடக்கிழக்கு பருவ மழை காலங்களில், அப்பகுதியில் அதிகளவில் மழை நீர் தேங்கும். இதனால், பருவ மழைக்கு முன் மருத்துவமனையின் அடித்தளம் (பேஸ் மட்டம்) பணிகளை முடிக்கும் நோக்கத்தில் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles