கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

கள்ளக்குறிச்சியில் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஐந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோவால் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய சேலம் மெயின் ரோடு, பஜார் தெரு ,ஆகிய பகுதிகளில் இருந்து முழுவதுமாக அடைக்கப்பட்டு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுருத்தப்பட்டிருந்தார் மேலும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் இயங்கக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் இருக்கக்கூடிய பிரபல தனியார் நகை கடையை அனுமதியின்றி திறந்து வைத்து சமூக இடைவெளி என்றும் கடைக்குள் பொதுமக்களை நகை வாங்குவதற்காக பின்பக்க வழியாக அவர்களை அனுமதித்து உள்ளனர் .இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா கடைக்கு சீல் வைக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி நகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து சென்று நகை கடைக்கு சீல் வைத்தனர் .அதேபோல கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய கடைகள் மற்றும் மளிகை கடைகள் மற்றும் செல்போன் கடைகள் உள்ளிட்ட 5 கடைகளுக்கு நகராட்சி துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுமக்களை அதிகப்படியாக கடைக்குள் சேர்ப்பது, சமூக இடைவெளி இன்றி கடைகளில் அனுமதிப்பது, பொதுமக்களிடத்தில் வியாபாரம் செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து காரணங்களினால் நகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர் மேலும் தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதியில் அரசின் உத்தரவை மீதியும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறந்து இருக்கும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் பொதுமக்களிடத்தில் சமூக இடைவெளி இன்றி வியாபாரம் செய்பவர்கள் கடைகளும் மூடப்படும் எனவும் நகராட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..

Shop Closed News 01.07.2020
Shop Closed News 01.07.2020
Show More

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

Related Articles