நமது மாவட்டம்கள்ளக்குறிச்சிசெய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஆக்சிஜன் படுக்கை வசதி பற்றாகுறையா ?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் அலைகழிக்கப்படுவதாலும்,ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காததாலும் இறப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகளின் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா தொற்று 2வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.கடந்த சில வாரங்களாக மூச்சுதிணறலுடன் அபாய கட்டத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சையளிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் 250, சிறுவங்கூரில் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டன. மேலும் 4 தனியார் மருத்துவமனைகளில் 175 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி 750, தச்சூர் பாரதி கல்லுாரி 120, ஜி.அரியூர்120, அயன்வேலுார் மாதிரி பள்ளி 100, ஏ.குமாரமங்கலம் மாதிரி பள்ளி 130, சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி 200, சின்னசேலம் ஐ.டி.ஐ., 120 என மாவட்டத்தில் மொத்தம் 1,540 சதாரண படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது 382 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மூச்சுத்திணறலுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைத்து ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியுள்ளது. தொடர்ந்து நோயாளி வருகை அதிகரிப்பால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகின்றனர்.அவசர சிகிச்சைக்காக வரும் பெரும்பாலான நோயாளிகளுக்கு கட்டாயம் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளதால், நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க முடிவதில்லை.இதனால் வசதியுடையவர்கள் வெளி மாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். ஏழைமக்கள் வேறுவழியின்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், உரிய சிகிச்சை பெற முடியாமல் தரையில் படுத்துக்கிடக்கும் பரிதாப நிலை நீடிக்கின்றது.நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை உடனுக்குடன் அளிப்பதில்லை. பாதிப்பு அதிகரிக்கும் போது அவர்களின் உறவினர்கள் பல முறை வற்புறுத்தினால் மட்டுமே டாக்டர், செவிலியர்கள் சென்று பார்ப்பதாகவும், மருந்து, மாத்திரைகளை சரியான நேரத்திற்கு வழங்காமல் காலதாமதம் செய்வதாகவும், முறையான உணவு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.தனியார் மருத்துவனைமனையில் அதிக பாதிப்புடன் வரும் நோயாளி இறந்து விட்டால், மருத்துவமனையின் பெயர் பாதிக்கும் என கருதி அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளை அனுமதிப்பது கிடையாது.

ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன என கூறி தட்டி கழிக்கின்றனர்.கள்ளக்குறிச்சியில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்க வில்லையெனில் 90 கி.மீ., தொலைவில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை, 100 கி.மீ., துாரத்தில் உள்ள சேலத்திற்கு நோயாளிகளை அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வளவு துாரம் செல்வதற்குள் நோயாளிகளின் உடல்நிலை மேலும் மோசமடைந்து ஆபத்தான நிலைக்கு செல்வதால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.இச்சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் பன்மடங்கு வசூலித்து பகல் கொள்ளை அடிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தினால் நீண்ட துார பயணத்து கள்ளக்குறிச்சி வரவேண்டிய நிலை ஏற்படாமல் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து உயிரை காப்பாற்ற முடியும்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிவதால், குறித்த நேரத்திற்கு சரியான சிகிச்சை கிடைக்காமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்போரின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிறது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இறப்பவர்கள் குறித்த தகவலை மறைப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மக்கள் நலன் கருதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடனடியாக கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்கின்றனர்.எங்கே போகிறது ரெம்டெசிவிர்?அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து முறையாக நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்ட பல நோயாளிகள் தங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை போதிய அளவு செலுத்தவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர். ரெம்டெசிவிர் செலுத்தப்பட்டதாக கணக்கு காட்டிவிட்டு, இம்மருந்து எங்கே செல்கிறது எனவும் தெரியவில்லை. காப்பாற்ற வழியிருந்தும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருகிறது

.டாக்டர்களின் மன அழுத்தம் மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் வருகை அதிகரிப்பு, கூடுதல் பணிச்சுமை மற்றும் விடுமுறை இல்லாதது போன்ற காரணங்களால் கொரோனா வார்டில் பணிபுரியும் ஊழியர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக டாக்டர், செவிலியர்களை அதிகளவில் நியமித்து டாக்டர்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

Show More

Leave a Reply

Related Articles