நமது ஆட்சியர்

கலெக்டர் கிரண் குராலா திடீர் ஆய்வு!!!

அத்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள் பண்ணை அமைத்து அதில் காய்கறிகள், கீரை வகைகளை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதை கலெக்டர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள் பண்ணை அமைத்து அதில் காய்கறிகள், கீரை வகைகளை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதை கலெக்டர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பிரதம மந்திரியின் கிஷான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக பகண்டை கூட்ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்குகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் அத்தியூர் பகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து கலெக்டர் கிரண்குராலா குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகணேசன், ஆறுமுகம், வேளாண் அலுவலர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles