நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதியதாக துவங்கிய பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சங்கீதா தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் விழா நடத்துவது. அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டும் விழாவில் பங்கேற்பது. அணிவகுப்பு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை அவர்களின் வீட்டிற்குச் சென்று பாராட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாரதி, போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் உட்பட வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles