விவசாயம்

கரும்பு வெட்டும் பணி துவங்கியதால்கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

கச்சிராயபாளையம் பகுதிகளில் ஊரடங்கால் வேலையின்றி தவித்த விவசாய கூலித் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணி துவங்கியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கச்சிராயபாளையம் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் உள்ள மக்கள் அதிகளவில் விவசாய கூலித் தொழிலையே நம்பியுள்ளனர். இவர்கள், நெல் மற்றும் கரும்பு நடவுப் பணிகள், களை எடுத்தல் மற்றும் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாய பணிகள் ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை. இங்கு வேலை இல்லா சமயங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சென்னை, கோயம்புத்துார் போன்ற பெரு நகரங்களுக்கு கட்டட பணி செய்ய செல்கின்றனர். மேலும், சிலர் கேரளா, கர்நாடகா, போன்ற வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக இருந்த ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் வெளியூர்களில் தங்கி வேலை செய்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வந்தும் வேலையின்றி சிரமப்பட்டு வந்தனர்.தற்போது அரசு ஊரடங்கு தளர்வால் கச்சிராயபாளையம் மற்றும் மூங்கில் துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை பணிகள் துவங்கியுள்ளன.குறிப்பாக கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த திங்கள் முதல் அரவை பணிகளை துவங்கியுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பை இழந்து தவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதால்தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles