நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

கனரக வாகனங்களுக்கு தடை!!!

முதல்வர் வருகையையொட்டி கனரக வாகனங்கள் இன்று கள்ளக்குறிச்சி நகர பகுதிக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி., ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., ஜியாவுல்ஹக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகிறார். இதையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் கனரக வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகர பகுதிக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வரும் கனரக வாகனங்கள், ரோடுமாமாந்தூரில் இருந்து இடது புறம் திரும்பி சிறுவங்கூர், தண்டலை, சாமியார் மடம் வழியாக விழுப்புரம் மற்றும் திருச்சிக்கு செல்ல வேண்டும்.

அதேபோல், ரோடுமாமாந்தூரில் வலது புறம் திரும்பி மோகூர், கச்சிராயபாளையம் வழியாக சேலம் செல்ல வேண்டும்.கச்சிராபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும், கனியாமூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles