குற்றம்செய்திகள்

கணவரை கொலை செய்ய திட்டம் – கடைசியில் நிகழ்ந்த விபரீதம்…

பண்ருட்டி அருகே சொத்தில் பங்கு தாராத கணவரை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில் கணவரின் நண்பர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி கீழ்மாம்பட்டு ஊரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். கூலி விவசாயியான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்ததால் ஜெயக்கொடி என்பரை திருமணம் செய்தார். இந்நிலையில் ராமலிங்கம் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயகொடி, ராமலிங்கம் பெயரில் உள்ள சொத்துக்களை பிரித்து தனது பெயரில் எழுதி வைக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறதுஇதற்கு ராமலிங்கம் மறுத்ததால் அவரை கொலை செய்ய ஜெயகொடி திட்டமிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ராமலிங்கம் மது அருந்துவதற்காக வீட்டில் மது பாட்டில் ஒன்றை வாங்கி வைத்துள்ளார்

இதனைக்கண்ட ஜெயக்கொடி இதுதான் சமயம் என்று பூச்சி மருந்தை மது பாட்டிலில் கலந்து வைத்துள்ளார்.இதனையறியாத ராமலிங்கம், தனது நண்பர் பாலமுருகனுடன் சேர்ந்து வீட்டில் இருந்த மதுவை எடுத்து குடித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியிலேயே பாலமுருகன் பலியானார்.

ராமலிங்கம் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜெயகொடி, ராமலிங்கத்தை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார், ஜெயகொடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Leave a Reply

Related Articles