சினிமா செய்திகள்

கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்பதை ஆண்களுக்கும் சொல்லி தர வேண்டும் : டிகை பூர்ணா

முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை - பூர்ணா

பூர்ணா
நடிகை பூர்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் பெண்கள் முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு ஆண்களுக்கு சமமாக அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும். பெண்களுக்கு சிறுவயது முதலே பெற்றோர் அறிவுரைகளை சொல்லி வளர்க்கிறார்கள். கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சில எல்லைகளை வைக்கிறார்கள்.
பூர்ணா
கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்பதை ஆண்களுக்கும் சொல்லி தர வேண்டும். சினிமா துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. பெண் இயக்குனர்கள் இன்னும் அதிகமாக வந்தால் மேலும் பலன் கிடைக்கும். ஆனால் சினிமாவில் 80 சதவீதம் ஹீரோக்களின் ஆதிக்கம்தான் உள்ளது. சமீபகாலமாகதான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகின்றன. 15 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கிறேன். முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை. ஆனால் பூர்ணா என்றால் பலமான கதாபாத்திரங்களுக்கு ஏற்றவர் என்ற பெயர் கிடைத்துள்ளது”.
Show More

Leave a Reply

Related Articles