கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்வரலாறு

கட்டுபாடு இல்லாத கட்டுபாட்டு பகுதி !

கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களிண் எண்ணிக்கை 67 ஆக உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி ,வடக்கனந்தல் ,உளுந்தூர்பேட்டை ,திருக்கோவிலூர் ,சங்கராபுரம் ,சின்ன சேலம் என அனைத்து பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் இடங்கள் அடைக்கபட்டு கட்டுபாட்டு பகுதிகளாக அறிவிக்கபட்டது .அதே போல கள்ளக்குறிச்சியில் உள்ள 4 வார்டுகளில் இருக்கும் 27 தெருக்கள் மூடபட்டுள்ளது .குறிப்பாக கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தை வெளி ,காய்கறி மார்க்கெட் ,பஜார் தெரு ,மேல் அக்ரகார தெரு ,சேலம் மெயின் ரோடு ,குளத்து மேட்டு தெரு ,செக்குமேட்டு தெரு என முக்கிய தெருக்கள் அனைத்தும் மூடபட்டது .இந்த பகுதிகள் அனைத்தும் கட்டுபாட்டு பகுதிகளாக அறிவிக்கபட்ட நிலையில் அங்கு நகராட்சி அதிகாரிகளின் சார்பில் தடுப்பு கட்டைகள் கட்டபட்டது இருப்பினும் பொதுமக்கள்  சில இடங்களில் அதனை உடைத்துவிட்டு கட்டுபாட்டு பகுதிகள் வழியாக இரு சக்கரவாகனத்தில் சென்று வருகின்றனர் .கட்டுபட்டு பகுதியில் இருப்பவர்கள் வெளியில் வர கூடாது என கூறியிருந்த நிலையில் அப்பகுதியினுள் வெளி பகுதி நபர்கள் வருவது தொற்றை ஏற்படுத்தும் வகையில் உள்ளது .இதனை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முறையாக கணிகாணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்…

தடுப்பு கடைகளை மீறி செல்லு
Corona News 25.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles