நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

எரிவாயு தகன மேடை புகைபோக்கி பழுது; ஜன்னல் வழியாக வெளியேறுவதால் அவதி

கள்ளக்குறிச்சி நகராட்சி எரிவாயு தகன மேடையிலிருந்து புகை, புகைப்போக்கி வழியாக செல்லாமல் ஜன்னல் வழியாக வெளியேறுவதால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது.கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகளவு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி நாளொன்றுக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் இறந்து வருகின்றனர்.இதில், பெரும்பாலான உடல்கள் நகராட்சி எரிவாயு தகனமேடையில் எரிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் பொதுவான இறப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் கள்ளக்குறிச்சியில் உள்ள எரிவாயு தகனமேடையில் தினமும் 15க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்படுகின்றன.இங்கு சடலங்கள் எரியூட்டும் போது ஏற்படும் புகை புகைப்போக்கி வழியாக வெளியேறாமல் கட்டடத்திலேயே நிரம்பி ஜன்னல் வழியாக வெளியேறுகிறது. இதனால் குறைந்த உயரத்தில் புகை காற்றுடன் கலந்து அருகில் உள்ள வீடுகள், சாலைகளில் பரவுவதால் அந்த வழியாக செல்வோர் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக இங்கு வரும் சடலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காஸ் சிலிண்டர் கிடைக்காமல், தகனமேடையில் விறகுகளைக் கொண்டு சடலங்கள் எரியூட்டும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தகனமேடையைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் அங்குள்ள காத்திருக்கும் அறை, குளியல் அறை ஆகியவற்றை சீர்படுத்த வேண்டும்.

Show More

Leave a Reply

Related Articles